வெள்ளி, 7 டிசம்பர், 2012

2500 ஆண்டுகளுக்கு முன்பே காதல் விழா கொண்டாடிய தமிழர்கள்..!

காதலர் தினம் என்றால் மேற்கத்திய திருவிழா என்றுதானே இதுவரை நினைத்துக்கொண்டிருந்தோம்? ஆனால் உண்மை அதுவல்ல. காதலர் தினம் முதன்முதலில் பண்டைய  தமிழகத்தில் கொண்டாடப்பட்ட ஒரு திருவிழா.



ரோமில் காதலர் தினம் கொண்டாடப்பட்டது கி.பி 3ம் நூற்றாண்டில் இருந்துதான். ஆனால் பண்டைத் தமிழகத்தில் 2500 ஆண்டுகளுக்கு முன்பே (கி.மு 5ம் நூற்றாண்டுக்கு முன்பே) இந்திர விழா (காதல் விழா, காமன் விழா) என்ற பெயர்களில் காதலர் தினம் கொண்டாடப்பட்டிருந்திருக்கிறது. பூம்புகாருக்கு வர்த்தகம் செய்ய வந்த ரோமானியர்கள் அதை ரோமில் ஏற்படுத்தியிருக்க வேண்டும்.

தமிழர் - ரோமானியர் வர்த்தகம்:
ரோம் மன்னர் அகஸ்டஸ் காலத்தில் கி.மு 1-ம் நூற்றாண்டில் ரோமிற்கும், பண்டைத் தமிழகத்திற்கும் இடையான வர்த்தகம் துவங்கியது. லத்தீன் மொழியில் சேர மன்னர் (முசிறி துறைமுகம்) பாண்டிய மன்னர் பற்றிய குறிப்புகள் உள்ளன.
பைபிள் 10:22 : சாலமன் மன்னனின் வர்த்தகக் கப்பல்கள் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்கள், வெள்ளி, யானைத்தந்தம், மயில்களை ஏற்றிக்கொண்டு திரும்பியிருக்கின்றன. பண்டைய இந்தியாவில் தமிழகத்தில் மட்டுமே மயில்களும் யானைத்தந்தமும் இருந்தது.

ரோம் - தமிழர் வர்த்தகம்

தமிழர்கள் கொண்டாடிய காதல் விழா:

சோழன் செம்பியன் (கி.மு 3-ம் நூற்றாண்டுக்கும் முந்தியவன்) பொதியை மலையில் குடிகொண்டிருந்த தமிழ் முனிவன் அகத்தியன் இட்ட ஆணையை ஏற்று, காதல் திருவிழாவைக் கொண்டாடினான் என்று சங்க இலக்கியம் கூறுகிறது. காவிரிப் பூம்பட்டினத்தை விழாக்கோலம் செய்து திருவிழாவை காதல் திங்கள் விழாவாக இருபத்தெட்டு நாட்கள் வருடந்தோறும் கொண்டாடினர். அதேபோல் மதுரையிலும் கொண்டாடப்பட்டது.
பங்குனி மாதம் இருபத்தொன்பதில் சித்திரை நாளில் (சித்திரை விண்மீன் கூடிய நன்னாளில்) நிறைவு பெற்றுள்ளது. அதேபோல், பங்குனித் திங்களுக்கு முன், மாசித் திங்கள் சித்திரை நாளில் விழா‌விற்கான கால்கொண்டு கொடியெடுத்துள்ளனர். இந்த மாசி மாசத்தில்தான் இன்றைய காதலர் தினம் வருகிறது (பிப்ரவரி 14)

காதலர் விழா பற்றி கடைச்சங்க இலக்கியங்களில் 

(கி.மு 5ம் நூற்றாண்டு முதல் கி.பி 2ம் நூற்றாண்டு வரை):
சிலப்பதிகாரம்
இந்திர விழா ஊர் எடுத்த காதை
அலைநீர் ஆடை, மலை முலை ஆகத்து,
ஆரப் பேரியாற்று, மாரிக் கூந்தல்,
கண்ணகன் பரப்பின் மண்ணக மடந்தை
புதை இருள் படாஅம் போக நீக்கி,
உதய மால் வரை உச்சித் தோன்றி,


உலகு விளங்கு அவிர் ஒளி மலர்கதிர் பரப்பி
வேயா மாடமும்; வியன் கல இருக்கையும்;
மான் கண் காதலர் மாளிகை இடங்களும்;
கயவாய் மருங்கில் காண்போர்த் தடுக்கும்
பயன் அறவு அறியா யவனர் இருக்கையும்;
கலம் தரு திருவின் புலம் பெயர் மாக்கள்
கலந்து,  இருந்து உறையும் இலங்கு நீர் வரைப்பும்;

கடலை ஆடையாகவும், மலை போன்ற முலையினையும் (என்னே உவமை?), அந்த முலைகொண்ட மார்பினில் பெரிய ஆறுபோன்ற முத்து வடத்தினையும் (ஆஹா அடடா) மேகத்தைக் கூந்தலாகவும் கொண்ட பெண்ணின் உடலை மறைத்த இருளான போர்வையை நீக்கி, பெரிய மலையின் உச்சியிலே தோன்றி, உலகம் வாழ்வதற்குக் காரணமான சூரியன் தன் ஒளியைப் பரப்புகிறான். நிலா முற்றமும் (மொட்டை மாடி), நிறைய நகைகள் கொண்ட இடமும், மான் கண்போல மாளிகையையுடைய இடங்களும்; துறைமுகத்தில் தம்மைக் காண்பவர் கண்களைப் போகவிடாமல் தடுக்கும் கெடுதலறியாத யவனர்(மிலேச்சர்) இருக்கும் இடங்களும்; மரக்கலத்தைக் கொண்டு வணிகம் செய்ய தம் நாட்டைவிட்டு வந்துள்ள வேற்றுநாட்டு வணிகர்களும் ஒன்றாகக் கலந்திருக்கின்ற, அருகே நெருங்கியிருக்கின்ற கரையோரக் குடியிருப்புகளும்!
  • யவனர் - வணிகம் செய்ய வந்த ரோமானியர்/ கிரேக்கர்.

  • மிலேச்சர் - வாய் பேச முடியாத காவலர்கள். இவர்களும் ரோமானிய வணிகர்களுடன் வந்தவர்கள். இவர்களில் சிலர் தமிழ் மன்னர்களுக்குக் காவலர்களாகவும் அரண்மனைக் காப்பாளர்களாகவும் பணி புரிந்தனர்.
புதுக்கோட்டையில் கண்டெடுக்கப்பட்ட ரோமானியர்  நாணயம், காலம் கி.மு 1-ம் நூற்றாண்டு

அகநானூறு. 149: 9-11 
ரோமாபுரி நாட்டினராகிய யவனரின் மரக்கலங்கள் முசிறித் துறைமுகத்திற்குப் பொன்னைக் கொண்டு வந்து இறக்கி விட்டு மிளகு மூட்டைகளை ஏற்றிச் சென்றன.
அகநானூறு 45, 76, 135, 222, 236, 376 
கரிகால் வளவன் மகள் ஆட்டனந்திஆதிமந்தி என்னும் சேரனிடம் காதல் கொண்டாள். அவர்கள் இருவரும் காவிரிப்பூம் பட்டினத்தில் காதல் திருவிழாவின் போது நீராடிக் கொண்டிருந்தனர். அப்போதுஆதிமந்தியை காவிரி ஆற்றுநீர் அடித்துச் சென்றது. ஆதிமந்தியைத் தேடிய ஆட்டனந்திகாவிரி நதிக்கரை வழியே தேடிச் சென்றாள். அவள் தேடிச் சென்றபோதுகாமனுக்கு வில்விழா நடந்து கொண்டிருந்தது என்று ஆதிமந்தி தன் பாடலில் குறிப்பிடுகின்றாள்.
வரலாறு என்றுமே சுவாரஸ்யமானவை. :-)
டிஸ்கி : ஆட்டனந்தியின் மீதிக்கதை - மருதி என்பவள் அவனைக் காப்பாற்றினாள், காதலித்தாள். ஆனாலும் ஆட்டனத்தியை அவளது காதலி ஆதிமந்தியிடம் ஒப்படைத்துவிட்ட கற்பரசி மருதி தனக்கு வேறு பற்றுதல் இல்லாததால் கடலுள் பாய்ந்து தன்னை மாய்த்துக்கொண்டாள். இவளுக்கல்லவோ சிலை வைத்திருக்க வேண்டும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக